Published : 09,Sep 2021 06:48 PM
தமிழகத்தில் ஒரேநாளில் 1,596 பேருக்கு கொரோனா: 21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 1,587 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,59,684 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,596ஆக உள்ளது. சென்னையில் நேற்று 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 186 ஆக அதிகரித்திருக்கிறது.
கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 7 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,221ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,534 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,77,646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.