[X] Close

’36 பந்துகளில் 57 ரன்கள்.. என்னா அடி!’.. சிக்ஸர் விளாசி அரை சதம் அடித்த ஷர்துல் தாக்கூர்

விளையாட்டு

India-all-out-for-191-runs-in-the-oval-Test-against-England-and-Shardul-Thakur-scored-31-balls-Half-Century-to-help-India-some-advantage-in-First-Innings

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட்டாகி உள்ளது. எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஷர்துல் தாக்கூர் 31 பந்துகளில் அரை சதம் விளாசினார். அதுவும் ராபின்சன் வீசிய அந்த பந்தில் தாக்கூர் சிக்சர் அடித்து அரை சதம் பதிவு செய்தார். 


Advertisement

image

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானிக்க, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11, கே.எல்.ராகுல் 17 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி நிதானமாக விளையாட புஜாரா 4, முன்னதாக களமிறங்கப்பட்ட ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


Advertisement

சற்று நேரம் இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் விளையாடிய கோலி, அரைசதம் விளாசிய உடனே ஆட்டமிழந்தார். ரகானே 14 ரன்களில் நடையைக் கட்ட வழக்கம் போல் ரிஷப் பண்ட்டும் 9 ரன்னில் ஏமாற்றினார். 127 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்துவிட்டதால் 150 ரன்களை கூட இந்திய அணி எட்டுமா என்ற நிலை இருந்தது.

ஆனால், அந்த தருணத்தில் நடந்தது. ஷர்துல் தாக்கூர் அதிரடி காட்டி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரள வைத்தார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். இதனால், இங்கிலாந்து பவுலர்கள் என்ன செய்வதென்று புரியாத நிலைக்கு வந்தனர். எப்படி பந்து போட்டாலும் ஷர்துல் விளாசினார். வெறும் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாடி வந்த அவர் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டால் இங்கிலாந்து வீரர்கள் சற்றே பெருமூச்சுவிட்டனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழ இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 150 ரன்களையே எட்டுமா என்ற நிலையில் இருந்து ஷர்துல் தாக்கூரின் அதிரடியால் இந்திய அணி 191 ரன்களை எட்டியது.

இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 4, ராபின்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


Advertisement

இதையும் படிக்கலாம் : தொடர்ந்து தவிர்க்கப்படும் அஸ்வின் : கொதிப்படைந்த ரசிகர்கள் ட்விட்டரில் சரமாரி கேள்வி! 


Advertisement

Advertisement
[X] Close