[X] Close

மணமகள் தேவை! நூதன முறையில் திருமணத்திற்கு பெண் தேடிய கேரள இளைஞர்!

இந்தியா

Wanted-bride-for-me-is-an-advertisement-placed-by-a-Kerala-youth-who-was-looking-for-a-woman-for-marriage

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நூதன முறையில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். வாழ்க்கை துணைக்கான அவரது தேடல் இணையத்தில் வைரல் டாக்காக மாறியுள்ளது. அப்படி என்ன செய்தார்? யார் அவர்?


Advertisement

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயதான உன்னிகிருஷ்ணன் தான் அந்த இளைஞர். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் திருமணத்திற்கான வரனை தேடுவது கொஞ்சம் சுலபமாகி உள்ளது. மேட்ரிமோனி தொடங்கி பல்வேறு வழிகள் அதற்கு உள்ளன. இருப்பினும் அதனால் தனக்கு பலன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்ததால் இப்படி விளம்பரம் கொடுத்துள்ளதாக சொல்கிறார் அவர். 

“எந்த வாழ்க்கை துணையை எதிர்பார்த்து நான் காத்திருக்கும் காலம் நீண்டு கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு தீர்வு காண எனக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி எனது கடையில் ‘மணமகள் தேவை’ என பிளக்கார்ட் போல விளம்பரம் கொடுத்திருந்தேன். 


Advertisement

image

அதில் ஜாதி, மாதம் பேதமில்லை என சொல்லி எனது செல்போன் நம்பரையும் கொடுத்திருந்தேன். அதை எனது நண்பர் போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். 

அதன் பிறகு எனக்கு அது தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஓயாமல் என் செல்போனின் ரிங்டோன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 


Advertisement

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இத்தாலி மாதிரியான நாடுகளிலிருந்தும் அழைப்புகள் வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார். 

தன்னை போலவே வாழ்க்கை துணையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள் சிலரும் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‘தங்களுக்கு பிடிக்காத வரன்களின் தொடர்பு எண்ணை எங்களுக்கு பகிருங்கள்’ என அவர்கள் உன்னியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்களாம். 

இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்டில் டாஸ் வென்றது இங்கிலாந்து - இந்தியா பேட்டிங் : ஆடும் லெவன் விவரம்


Advertisement

Advertisement
[X] Close