Published : 01,Sep 2021 10:43 AM
கலங்கிய ஓ.பி.எஸ் - தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானதையடுத்து, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஒருவாரமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி இன்று காலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஓ.பி.எஸூக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார். அப்போது, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினரும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினரும் உடனிருந்தனர்.
இதையும் படிக்கலாமே: அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு அணிகள்?