[X] Close

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வரும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

விளையாட்டு

Former-Sri-Lankan-Cricketer-and-CSK-Player-Suraj-Randiv-works-as-Bus-Drive-in-Australia-to-earn-his-livelihood

ஐபிஎல் லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011 முதல் 2012 வரை விளையாடி உள்ளார் சுராஜ் ரன்தீவ். இலங்கையை சேர்ந்த இவர் 2009 முதல் 2016 வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அந்நாட்டுக்காக விளையாடி உள்ளார். இவர் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 


Advertisement

image

வாழ்வாதாரம் ஈட்டும் நோக்கில் இதனை அவர் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆப்-ஸ்பின்னரான இவர் 2011 உலக கோப்பை இறுதி போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடி உள்ளார். இவரை போல ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெடிங்டன் வாயெங்கா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சிந்தக நமஸ்தே ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

36 வயதான ரன்தீவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகள் விளையாடி உள்ளார். அதன் மூலம் டெஸ்டில் 43 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். 

image

பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் நேரம் போக உள்ளூர் கிரிக்கெட் கிளப்பிலும் அவர் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வலைப்பயிற்சியில் பந்து வீச ஆஸ்திரேலிய அணி அவரை அழைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close