''அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக சேர வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால் அது இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை'' என்று சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த வழங்கிய ஐஏஎஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சேலம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தர்மலாஸ்ரீ, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மகப்பேறு விடுப்பில் சேலம் வந்த அவர் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். கடந்த வாரம் தர்மலாஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக சேர்ந்த தகவல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த தமிழியக்கம் அமைப்பினர் ஐஏஎஸ் அதிகாரி தர்மலாஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சந்தித்துப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மலாஸ்ரீ, "கருவுற்ற நேரத்தில் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை கிடைக்கிறது என்பதை அறிந்து மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்தான் சேர வேண்டும் என்று குடும்பத்தாருடன் கலந்துபேசி முடிவு எடுத்தேன். அரசு மருத்துவமனை குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே வரவேண்டும் என்ற நோக்கில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு சேர்ந்தேன். ஆனால் அது இவ்வளவு வைரலாக பரவும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கூட மகப்பேறு சிகிச்சைக்கு நகைகளை அடகு வைத்தாவது தனியார் மருத்துவமனையை நாடுகின்ற சூழ்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மிகுந்த அக்கறையோடு சிறந்த சிகிச்சை வழங்கியதாகவும், அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கு தன்னை உறவினர் போல பாவித்து உதவிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் தர்மலாஸ்ரீ தனது நன்றியை தெரிவித்தார். முழுமையான சிகிச்சை முடிந்து நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!