[X] Close

உபி: மாமியாருடனான சண்டையில் தேநீரில் விஷம் கலந்த புதுப்பெண் - 18 மாத குழந்தை பலி

குற்றம்

UP-woman-serves-in-laws-tea-mixed-with-poison--18-month-old-killed

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாமியாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிதாக மணமான பெண் ஒருவர், தனது கணவர் வீட்டினருக்கு விஷம் கலந்த தேநீர் வழங்கியதில் 18 மாத குழந்தை உயிரிழந்தது, மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்க்கு அருகில் உள்ள கோட்வாலி தேஹத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மச்சியாஹி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் பெண்ணுடைய கணவரின் சகோதரி மகனான 18 மாத குழந்தை சிவ்நாத் விஷம் கலந்த தேநீர் அருந்தி உயிரிழந்தான். மேலும்  பெண்ணின் மாமனார் பஞ்சம் ஜெய்ஸ்வால், கணவரின் சகோதரர் ஜிதேந்திரா, கணவரின் சகோதரி ஷிவானி மற்றும் ஷிவானியின் மகள் ஸ்ரீஷ்டி  ஆகியோர் இந்த விஷத்தேநீர் அருந்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக பஹ்ரைச் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஞானஞ்சய் சிங் கூறினார்.

குற்றம் சட்டப்பட்ட அனிதா கடந்த டிசம்பர் மாதம் ஜெய்ஸ்வாலின் மகன் பூரனை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர் தனது மாமியாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணவர் வீட்டை விட்டு சென்றார்.  திங்களன்று மறுபடியும் வீடுதிரும்பிய அனிதா தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கொண்டு வந்த சில நச்சுப் பொருள்களை தேநீரில் கலந்து கொடுத்தார். இந்தக் கொலை தொடர்பாக புகாரின் பேரில் அனிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close