[X] Close

விரைவுச் செய்திகள்: பேனர் கலாசாரத்தை நிறுத்துங்கள் - ஸ்டாலின் | டோக்கியோ பாராலிம்பிக்ஸ்

தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-11-PM

பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - முதல்வர்: உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறார். விழுப்புரத்தில் கொடிக் கம்பம் நட முயன்று சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

நகை வணிகர்கள் அடையாள வேலைநிறுத்தம்: ஹால்மார்க் தனித்துவ குறியீட்டு எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நகை வணிகர்கள் அடையாள வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்: தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய தளர்வுகளால் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகளில் மக்கள் கூடினர். புதிய படங்கள் கைவசம் இல்லாததால் குறைந்த அளவிலான திரையரங்குகளே திறக்கப்பட்டுள்ளது


Advertisement

டோக்கியோவில் தொடங்க உள்ள பாரா ஒலிம்பிக்: டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் தொடங்குகிறது. தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.

கோடநாடு விவாதம் - கேள்வியும் பதிலும்: சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் குறித்து விவாதிப்பது மரபுக்கும், மாண்புக்கும் எந்த வகையில் உட்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்தது அதிமுகதான் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருக்கிறார்.

கோடநாடு வழக்கு - உயர்நீதிமன்றத்தில் புதிய மனு: கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி புதிதாக மனு அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.


Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமரிடம் கோரிக்கை: நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடியிடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மனு அளித்திருக்கிறார். பீகாரை சேர்ந்த 11 கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தி இருக்கின்றனர்.

மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை: செப்டம்பர்- அக்டோபரில் மூன்றாம் அலை உச்சம் பெற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்டோபரில் தினசரி பாதிப்பு 2 லட்சமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கணித்திருக்கின்றனர்.

மதுரை மடத்தின் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு: மதுரை ஆதீன மடத்தின் 293 வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். நிகழ்ச்சியில் அனைத்து மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கோயில் நிலத்தை பிற தேவைக்கு பயன்படுத்தக்கூடாது: அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர, பிற தேவைக்கு பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

தொழிலதிபர் மகன் கடத்தல் - 4 பேர் கைது: திருப்பூரில் தொழிலதிபர் மகன் 3 கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட விவகாரத்தில் பணம் கொடுத்து மீட்ட பின் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அறுவை சிகிச்சை - பெண் உயிரிழப்பு: புதுக்கோட்டையில் குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகு மீண்டும் கருவுற்ற பெண் அறுவை சிகிச்சைக்காக சென்றபோது உயிரிழந்தார். மருத்துவர்களே காரணம் எனக்கூறி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

இளைஞர் மரணம் - தாயார் கண்ணீர்மல்க குற்றச்சாட்டு: தஞ்சையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துள்ளதாக இளைஞரின் தாயார் கண்ணீர்மல்க குற்றம்சாட்டி உள்ளார்.

அகழாய்வில் தங்க அணிகலன்கள்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டது. அகரம் தளத்தில் அறுங்கோண மற்றும் குண்டு மணி வடிவிலான அணிகலன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்: சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாகை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் துப்பாக்கிச்சண்டை: காபூல் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வீரர்களின் பதிலடி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

Advertisement
[X] Close