[X] Close

பாராட்டி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: உணர்ச்சிபெருக்கில் கண்கலங்கிய துரைமுருகன்

தமிழ்நாடு

கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்த தனக்கு உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.


Advertisement

கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகனை வைத்து தான் பார்ப்பதாகவும் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். துரைமுருகன் பொறுப்பு வகிக்கும் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் முன் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

image


Advertisement

மனதில் பட்டதை உறுதியுடன் சொல்லக் கூடியவர் என்றும் எந்த துறையை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுபவர் என்றும் துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அப்போது துரைமுருகன் கண்கலங்கினார். துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பேசினர்.


Advertisement

Advertisement
[X] Close