[X] Close

விருதுநகர்: பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

Virudhunagar-A-youth-was-arrested-in-Pokso-for-sexually-abusing-a-girl

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டார்.


Advertisement

அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியை சேர்ந்த 15 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியை கோரைக்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (23) என்ற இளைஞர் காதலிப்பதாக கூறப்படுகிறது. சிறுமியிடம் இளைஞர் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

image


Advertisement

இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது ஆறுமுகம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகத்தை கைது செய்த மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close