[X] Close

ஆப்கனில் ஆதிக்கம் செலுத்தும் தலிபான்களின் 6 முக்கிய தலைவர்களும் பின்புலமும் - ஒரு பார்வை

சிறப்புக் களம்

Six-important-figures-Who-lead-the-Taliban-movement

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அந்த இயக்கத்தின் ஆறு முக்கிய தலைவர்கள் யார், யார் என்பதை விரிவாக பார்ப்போம்.


Advertisement

தலிபான் அமைப்பின் நிறுவனர் மற்றும் முதல் தலைவர் முல்லா முகமது உமர் என்பவர். 1996 முதல்முறையாக தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார் முல்லா முகமது. 2001-ல் அமெரிக்க ஆதரவு உள்ளூர் படைகளால் தலிபான்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் தலைமறைவானான முல்லா மிகவும் ரகசியமாக வாழ்ந்து வந்தார். எனினும், விரைவாகவே மரணம் அடைந்தார். அவரின் மரணம் தப்பிச் சென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2013-ல்தான் அவரது மகனால் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு ஆறு பேர் இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்கள்.

ஹைபத்துல்லா அகுன்சாடா: தலிபான் அமைப்பின் தலைவர்களில் முதன்மையானவர் ஹைபத்துல்லா அகுன்சாடா. "விசுவாசத்தின் தலைவர்" என்று அழைக்கப்படும் இவர்தான் தற்போதைய தலிபான் குழுவின் அரசியல், மத மற்றும் ராணுவ விவகாரங்களில் இறுதி தீர்வு எடுக்கும் அதிகாரம் படைத்த நபர். இவருக்கு முன்னோடியாக இருந்த அக்தர் மன்சூர் என்பவர் 2016-ல் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்பு பொறுப்பேற்றுக் கொண்டார் அகுன்சாடா. இதே வருடம் இவர் தலைமறைவும் ஆனார்.


Advertisement

image

ஆனால், அதற்கு முன்னதாக 15 ஆண்டுகள் பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குச்லாக் நகரில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாமிய சட்டங்களை, அவரது கூட்டாளிகளுக்கு பயிற்றுவித்து வந்தார். இவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என நம்பப்படுகிறது. இப்போது வரை இவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.

முல்லா முகமது யாகூப்: தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா உமரின் மகன்தான் இந்த முல்லா முகமது யாகூப். இவர் தலிபான் குழுவின் ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பை கவனித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் தகவலின்படி அவர் நாட்டிற்குள்ளேயே பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. சில காலம் முன்பு, தலிபான் அமைப்பில் வாரிசு சண்டை உருவானபோது யாகூப், தலைவராக முன்மொழியப்பட்ட தகவல்களும் வெளியானது.


Advertisement

image

ஆனால், தலிபான் தளபதியின் கூற்றுப்படி, யாகூப்பிறகு போர்க்கள அனுபவம் இல்லாததாலும், மிகவும் இளமையாக இருந்ததாலும் அவருக்கு பதில் ஹைபத்துல்லா அகுன்சாடா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 30 வயதுக்கும் குறைவான நபர் என்று கூறப்படுகிறது

சிராஜுதீன் ஹக்கானி: முஜாஹிதீன் தளபதி ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் இந்த சிராஜுதீன். இவர் ஹக்கானி நெட்வொர்க்கை வழிநடத்தி வருகிறார் என அறியப்படுகிறது. ஹக்கானி நெட்வொர்க் என்பது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான்களின் நிதி மற்றும் ராணுவ சொத்துக்களை மேற்பார்வையிடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஆகும். ஹக்கானிகள் என அழைக்கப்படும் இந்த குழுவினர்தான் ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதலை அறிமுகப்படுத்தியதாக சில வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மீதான கொலை முயற்சி மற்றும் இந்திய தூதரகத்தின் மீது தற்கொலை தாக்குதல் உட்பட ஆப்கானிஸ்தானில் பல உயர் தாக்குதல்களை ஹக்கானிகள் செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது. 40 - 50 வயதுக்குள் இருப்பதாக நம்பப்படும் சிராஜுதீன் இருக்கும் இடமும் தெரியவில்லை.

முல்லா அப்துல் கனி பரதர்: தலிபான் அமைப்பை நிறுவிய இணை நிறுவனர்களில் ஒருவரான இவர் இப்போது தலிபான்களின் அரசியல் அலுவலக பணிகளை கவனித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் மற்றும் நீடித்த அமைதிக்கு வழி வகுக்கும் ஓர் அரசியல் ஒப்பந்தத்தை முறியடிக்க தோஹாவில் உள்ள குழுவின் பேச்சுவார்த்தை குழுவின் ஒரு பகுதியாகவும் அப்துல் கனி பரதர் இருந்தார்.

தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா உமரின் மிகவும் நம்பகமான தளபதிகளில் ஒருவராக புகழப்பட்டவர் பரதர். 2010-இல் தெற்கு பாகிஸ்தான் நகரமான கராச்சியில் பாதுகாப்புப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 2018-இல் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய்: தலிபானின் அரசாங்கத்தை அகற்றுவதற்கு முன்பு முன்னாள் துணை அமைச்சராக இருந்த ஸ்டானிக்ஜாய் தோஹாவில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் வாழ்ந்தார். 2015-இல் அங்குள்ள அரசியல் அலுவலகத்தின் தலைவராக மாறிய ஸ்டானிக்ஜாய் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பாக பங்கேற்றார்.

image

பல நாடுகளுடனான ராஜதந்திர பயணங்களில் தலிபான்களை பிரதிநிதித்துவப்படுத்துவது இவர்தான்.

அப்துல் ஹக்கீம் ஹக்கானி: தலிபான்களின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி. தலிபானின் சக்திவாய்ந்த மத அறிஞர்களின் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் இவர் தலிபான்களின் தலைவரான அகுன்சாடாவின் மிகவும் நம்பிக்கை உரிய நபர் என்று கூறப்படுகிறது.

தகவல் உறுதுணை: அல்ஜஸீரா


Advertisement

Advertisement
[X] Close