தலைப்புச் செய்திகள் | அதானி அம்பானி குறித்து பேசிய மோடி முதல் நிறம் குறித்து பேசிய சாம் பிட்ரோடா வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது அதானி, அம்பானி குறித்த கருத்து முதல் இந்தியர்களின் நிறம் தொடர்பாக பேசிய சாம் பிட்ரோடா கருத்து வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • லாரி நிறைய பணம் சென்றதால்தான் அம்பானி-அதானி குறித்து ராகுல்காந்தி விமர்சிப்பதில்லை என தெலங்கானா பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி காட்டம்.

 • அதானி, அம்பானி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்துங்கள் என பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“SRH என்னை சோஷியல் மீடியாவில் Block செய்தபோது உடைந்துவிட்டேன்..”! - எமோசனலாக பேசிய டேவிட் வார்னர்
 • நாற்காலி ஆட்டம் கண்டுள்ளதால் நண்பர்களையே தாக்கி பேசத்தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்.

 • ஒலிபெருக்கி, போதிய வெளிச்சம் இல்லாமல் செல்போன் ஒளியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி... மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ராய்பரேலி தொகுதியில் வாக்குசேகரிப்பு.

 • 80க்கும் மேற்பட்ட விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ரத்து செய்த விவகாரத்தில் விளக்கமளிக்க மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ்.

 • போதைப்பொருள் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில், ஜாஃபர் சாதிக் தனது 2 ஐபோன்களை உடைத்து நேப்பியர் பாலம் அருகே வீசியதாக தகவல்.

 • மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா செயலிழப்பை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 • தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்மலா தேவி தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 • புதுக்கோட்டை அருகே பிடாரி அம்மன் ஆலய பௌர்ணமி விழாவில் இளைஞர்களுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக நடனம். மேலும், ஏராளமானோர் பங்கேற்பு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
60 ஆயிரம் தமிழர் வாக்குகள்: எதிரணியில் சொந்தக் கட்சியினர்; ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா ரோஜா?
 • சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் மூணாறு தாவரவியல் பூங்கா மலர்க் கண்காட்சியில் வண்ண மலர்களுடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழும் மக்கள்

 • சிலியின் முக்கிய நகரங்களை மூடிய வெண் பனியால் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதி.

 • விக்கெட் இழப்பின்றி குறைவான பந்துகளில் 166 ரன்கள் என்ற இலக்கை எட்டி ஹைதராபாத் அணி சாதனை படைத்துள்ளது. தொடர் தோல்வியால் லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல்.

SRH vs LSG
SRH vs LSGPT
 • ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் லக்னோ - ஹைதராபாத் ஆட்டத்தின் முடிவால் அதிகராப்பூர்வமாக வெளியேறிய மும்பை அணி.

 • 12 நாட்கள் கடல் வழி பயணமாக கிரீஸில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்ததுஒலிம்பிக் சுடர். இந்நிலையில், ஒலிம்பிக் தீபத்திற்கு கண்கவர் வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு.

 • காசாவில் முக்கிய எல்லைகளை மீண்டும் திறந்தது, இஸ்ரேல் அரசு. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க கட்டுப்பாடு.

 • காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா இந்தியர்களின் நிறம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானதால் பதவியை ராஜினாமா செய்தார்.

 • “நிற வெறியுடன் பேசிய சாம் பிட்ரோடா அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா?” என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com