வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.