“SRH என்னை சோஷியல் மீடியாவில் Block செய்தபோது உடைந்துவிட்டேன்..”! - எமோசனலாக பேசிய டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் அணிக்காக கோப்பை வென்ற கேப்டனாக இருந்தபோதும், SRH அணியால் சமூக வலைதளத்தில் பிளாக் செய்யப்பட்டது அதிகமாக காயப்படுத்தியதாக டேவிட் வார்னர் எமோசனலாக கூறியுள்ளார்.
david warner
david warnerx

ஐபிஎல் தொடரில் 2009-2013 முதல் டெல்லி அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர், 2014ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். அதற்கு பிறகு 2014-2021 வரை சன்ரைசர்ஸ் அணியுடன் பயணித்த டேவிட் வார்னர், 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை கோப்பைக்கு அழைத்துச்சென்று பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

ஆனால் 2021ம் ஆண்டு ஐபிஎல்லில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த பிறகு, பாதி தொடரிலிருந்து அணியில் உட்கார வைக்கப்பட்ட டேவிட் வார்னர் தன்னுடைய கேப்டன் பதவியையும் இழந்தார். தன்னுடைய அணிக்காக ட்ரிங்ஸ் சுமந்துசென்ற வார்னரின் நிலையை பார்த்த ரசிகர்கள் SRH நிர்வாகத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

david warner
david warner

ஆனால் தன்னுடைய மோசமான ஃபார்மின் காரணமாக 2021-ம் ஆண்டிற்கு பிறகு அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட டேவிட் வார்னர், SRH அணியால் சோஷியல் மீடியாவில் பிளாக் செய்யப்பட்டார். அணிக்காக கோப்பை வென்றுகொடுத்த கேப்டனாக பிரிக்கவே முடியாத இடத்திலிருந்த டேவிட் வார்னர், திடீரென பிளாக் செய்யும் நிலைக்கு சென்றது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்துவருகிறது.

david warner
david warner

இந்நிலையில் SRH அணி நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்ட போது அதிகமாக வலித்தது என்று எமோசனாலாக பேசிய டேவிட் வார்னர், அணிக்காக தன்னுடைய ஃபார்மை மீட்டுவந்து சிறப்பாக செயல்பட விரும்பியதாக வெளிப்படுத்தியுள்ளார்.

david warner
’நீ சிரிக்கலனா உன்கிட்ட பேசமாட்டேன்..’! ஷசாங் சிங்கிற்கு நம்பிக்கை கொடுத்த Bairstow-ன் வார்த்தைகள்!

அது அதிகமாக காயப்படுத்தியது..

அஸ்வினின் யூ-டியூப் சேனலில் குட்டி ஸ்டோரிஸ் உரையாடலில் பேசிய டேவிட் வார்னர், SRH அணியுடனும் அணியின் ரசிகர்களுடனும் எப்படி பிணைப்புடன் இருந்தேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

அணியால் பிளாக் செய்யப்பட்டது ரசிகர்களை அதிகமாக காயமாக்கியதாக கூறிய டேவிட் வார்னர், “அணி நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்டது என்னை அதிகமாக காயப்படுத்தியது. ஏனென்றால் அது என்னை விட ரசிகர்களை அதிகமாக காயப்படுத்தியதாக உணர்கிறேன். நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான உறவென்றால் அது ரசிகர்கள் தான். அணி ரசிகர்கள் உடனான என்னுடைய ஈடுபாடு மிகவும் நன்றாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

david warner
david warner

4 வருடங்களாக பிளாக்கில் இருப்பதை கூறிய அவர், “பிளாக் செய்யப்பட்டது பற்றி கூறினால், அது எதற்கு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது விசித்திரமான ஒரு நடவடிக்கையாக இருந்தது. இருப்பினும் என்னை பின்தொடரும் ரசிகர்களை பெற்றுள்ளேன், அவர்களுடன் நான் தொடர்ந்து பேசிவருகிறேன்” என்று கூறியுள்ளார்.

SRH அணியால் பிளாக் செய்யப்பட்டது பற்றி கூறினால், அணியில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்ட பிறகு, அணியின் ஒவ்வொரு இடுகையின் போதும் அதைப்பயன்படுத்தி அணி மற்றும் ஸ்டாஃப்களை குறைசொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டதாக டேவிட் வார்னர் மீது குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

david warner
"எந்த Mathematical வாய்ப்புமில்லை" புலம்பிய ஹர்திக் பாண்டியா! இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறும் MI?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com