[X] Close

ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நாளை பேச்சுவார்த்தை - ரஷ்யா

உலகம்

Russia-to-meet-Afghanistan-Taliban-tomorrow-about-support

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் நாளை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அதேநேரத்தில் தலிபான்களுடன் நட்பை விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.


Advertisement

அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இந்த நிலையில், காபூலில் உள்ள ரஷ்ய தூதுவர் தலிபான்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துவார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அவர்களது ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ரஷ்யா கூறியுள்ளது. ஐரோப்பிய யூனியனும் தலிபான்களுடன் பேச்சு நடத்தப் போவதாக கூறியுள்ளது.

அதேநேரத்தில் தலிபான்களுடன் நட்புறவை விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான், தலிபான்கள் அரசை அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில், அங்கு ராணுவத்தை அனுப்புவது என ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close