Published : 15,Aug 2021 03:57 PM

மூன்றே வயதில் சிறப்பு டாக்டர் பட்டம் உட்பட 13 பதக்கங்கள் - அசத்தும் சேலம் சிறுவன்

சேலத்தைச் சேர்ந்த மூன்றே வயதான சிறுவன், 102 பிரபலங்களின் புகைப்படங்களை பார்த்த உடன் அவர்களது பெயர்களை மிகச்சரியாக கூறி சாதனை படைத்துள்ளான்.

செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் - நந்தினி தம்பதியின் மகன் தேஜஸ், சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என 102 பிரபலங்களின் புகைப்படங்களை பார்த்து நாற்பத்து ஆறே வினாடிகளில் அனைவரது பெயர்களையும் மழலை மொழியில் கூறுகிறான்.

இதேபோல், 51 வகையான மீன்களின் பெயர்களையும், பத்து வகையான நாய் இனங்களையும், பத்து நாடுகளின் நாணயச் சின்னங்களையும் புகைப்படத்தில் பார்த்த நொடியில் அவற்றின் பெயரை கூறி அசத்துகிறார். இதன்மூலம் கடந்த ஒரு ஆண்டில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் உள்ளிட்ட 13 சாதனை பதக்கங்களை சிறுவன் பெற்றுள்ளான்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்