[X] Close

சாம்பல் வனமாக மாறிய எண்ணூர் கழிவெளி பகுதி - கேள்விக்குறியாகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல்

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள கழிவெளி பகுதிகளில் வெளியேறும் சாம்பல் கழிவுகளால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகி உள்ளது.


Advertisement

சாம்பல் நிலப்பரப்பாக காட்சியளிக்கிறது எண்ணூர் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள கழிவெளி பகுதி. தமிழக அரசிற்கு சொந்தமான டான்ஜெட்கோ (Tangedco) நிறுவனம் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால், அப்பகுதி சாம்பல்வனமாக மாறியுள்ளது. வடசென்னையின் பிரதான நீர்வழித்தடமாக உள்ள, கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கலப்பதால் அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லவும், சாம்பல் கழிவுகளை வெளியேற்றவும், கடந்த சில ஆண்டுகளில் அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்ட நிலையில், கொசஸ்தலை நதியையும் எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தையும் பாதுகாக்க அரசு முனைய வேண்டும் எனக் கோருகிறது எண்ணூர் கழிவெளி பிரசார பாதுகாப்பு குழு.


Advertisement

எண்ணூர் அனல் மின் நிலையத்தை சுற்றிய கிராமங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களின் வாழ்நிலை மாறியுள்ளதோடு, சாம்பல் கழிவுகள் வெளியேறி நீர்வழித்தடங்களில் கலந்ததால், கடல் உணவான இறாலின் தன்மையே மாறியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த பிரச்னை தொடர்பாக பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "பல ஆண்டு கால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மின் வாரியம் மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மின் தேவை அதிகரித்தும் வரும் சூழலில், மின் உற்பத்திக்கான உத்திகளை வகுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு


Advertisement

Advertisement
[X] Close