[X] Close

சர்ச்சை பேச்சு - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி

குற்றம்

Bail-petition-of-Priest-George-Ponnaiya-dismissed

இந்து மதம், அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Advertisement

குமரி அருகே அருமனையில் நடந்த கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில், பாரத மாதா மற்றும் இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். பிரதமர், அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சித்த வீடியோ வைரலான நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.

தொடர்ந்து, மதுரை அருகே கள்ளிக்குடியில் காவல்துறை அவரை கைது செய்தது. அவரை அருமனையில் உள்ள குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்துமத நம்பிக்கைகளை இழிவாக பேசியதாக உள்ளிட்ட 7 பிரிவுகளில் தொடரப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.


Advertisement

இந்நிலையில் ஜாமீன் கேட்டு பாதிரியார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குழித்துறை நீதிமன்றத்தில் பாதிரியார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close