Published : 07,Aug 2017 05:51 AM

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை - கண்காணிப்பு பணிகள் தீவிரம்

terrorist-shot-dead-in-Kashmir---the-intensification-of-surveillance-tasks

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சம்பூரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வீரர்கள் குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். உமர் என்ற அந்த தீவிரவாதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் அபு இஸ்மாயில் அமைப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வரும்நிலையில், பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்