[X] Close

விரைவுச் செய்திகள்: மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் | காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழப்பு?

தமிழ்நாடு

speed-news-breaking-news-in-tamil
பரவலாக மழை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 
முதல்வர் டெல்லி பயணம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்: ராமேஸ்வரம் அருகே கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு: மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
 
கல்லூரி சேர்க்கை: நிகழ் கல்வியாண்டில், முதலாண்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
 
காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழப்பா?: திருவண்ணாமலையில் காவலர்களால் துரத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.
 
இணையதளத்தில் வழக்கு விவரங்கள்: சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்கள் காவல்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.
 
முதல்வர் பாராட்டு: உலக சதுரங்க போட்டியில் 37 வயது வீரரை வீழ்த்திய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
அவனியாபுரம் காவல்துறை அறிவிப்பு: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு வெளி இடங்களில் பயிற்சி அளித்திட முன் அனுமதி பெற்றிட வேண்டும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
 
மேலும் 5 பேருக்கு ஸிகா: கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு ஸிகா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து அம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
 
யாத்திரை ரத்து: உத்தராகண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையை கொரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு.
 
கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு அனுமதி: சபரிமலையில் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க முடியும்.
 
அமரிந்தர் சிங் அறிவிப்பு: பஞ்சாப் மாநில காங்கிரஸ் விவகாரங்களில் கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
 
கட்டுக்கடங்காத காட்டுத் தீ: அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாகப் பரவும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
 
வழியனுப்பி உற்சாகம்: டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளில் அதிகம் பேர் கொண்ட அணி, நேற்றிரவு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. 54 தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் என 88 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் டோக்யோ சென்றனர்.
 
உயர் நீதிமன்றம் உத்தரவு: பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பணியிடமாற்றம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமியை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கர்நாடகாவில் விரைவில் புதிய முதலமைச்சர்?: பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை அடுத்தடுத்து சந்தித்த நிலையில், எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் பதவிலியிருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார்.
 
ஜான் பாண்டியன் அதிருப்தி: சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரால் தான் பழிவாங்கப்பட்டதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
திருமாவளவன் கருத்து: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படாது என நம்புவோம் என சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
[X] Close