[X] Close

முதல்வராக நீடிப்பாரா எடியூரப்பா? - கர்நாடக அரசியலில் சலசலப்புகள் தீவிரம்

இந்தியா

Does-BS-Yediyurappa-continue-as-Chief-Minister-of-Karnataka-State-amid-of-Internal-party-Politics-in-BJP

உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடக முதல்வராக எடியூரப்பா தொடர்வாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.


Advertisement

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பதவி விலக கட்சியின் தேசிய தலைமை வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து சர்ச்சை நிலவும் சூழலில், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எடியூரப்பா சனிக்கிழமையன்று சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அவர் சந்தித்தார் என பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த எடியூரப்பா, கர்நாடக முதல்வராக தொடர்வாரா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரது அரசியல் போட்டியாளர்கள் எழுப்பியுள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமைக்கு, எடியூரப்பாவின் மகன்கள் கர்நாடக அரசு முடிவுகளில் தலையிடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவிலேயே பாஜகவின் தேசிய தலைமை, எடியூரப்பாவின் இடத்திலேயே புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Advertisement

எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்துக்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைப்படி மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை ராஜினாமா செய்து, வேறு பொறுப்புகளுக்கு செல்கிறார்கள் என்று எடியூரப்பாவின் அரசியல் போட்டியாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமையோ எடியூரப்பா விலகல் மற்றும் அவருக்கு பதிலாக புதிய முதல்வரை நியமிப்பது ஆகிய விஷயங்கள் திட்டமிட்டு கச்சிதமாக நடைபெறவேண்டும் என்றும், ஆகவே இதுகுறித்து விரிவான திட்டங்களை இறுதி செய்ய வேண்டும் எனவும் கருதுகிறது என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். 

எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக அவரது மகன்களுக்கு கர்நாடக பாரதிய ஜனதா கட்சியிலும், கர்நாடக அரசியலும் முக்கிய பொறுப்புகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 


Advertisement

சமீபத்தில் கர்நாடக முதல்வருக்கு நெருக்கமான ஆதரவாளர் என கருதப்படும் ஷோபா கரண்ட்லஜே மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் மத்திய அமைச்சராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சதானந்த கவுடா ராஜினாமா செய்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்ரமணியம்


Advertisement

Advertisement
[X] Close