[X] Close

’இது அடக்க முடியாத காளை’ - சூர்யா பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு

சினிமா

The-Official-Birthday-Common-DP-for-Actor-suriya-birthday

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா வரும் ஜூலை 23-ஆம் தேதி தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ’வாடிவாசல்’ கெட்டப்பில் காமன் டிபி வெளியிட்டுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.


Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின், டைட்டில் லுக் நேற்று வெளியாகி இருந்தது. காளைக்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை உணர்த்தும் விதமாக காளை முத்திரையுடன் டைட்டில் லுக்கை வெளியிட்டு இருந்தனர். ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களும் டைட்டில் லுக்கை பகிர்ந்து பாராட்டினர்.

image


Advertisement

இந்த நிலையில், கூட்டமாக திரண்டிருக்கும் மனிதர்கள் கைகளில் கயிற்றுடன் நிற்க அடக்கமுடியாத காளையாக சூர்யா கயிற்றை திமிறிக்கொண்டு செல்லும் வகையில் மிரட்டலான காமன் டிபியை வெளியிட்டு சிறப்பித்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். இதனை அவரின் ரசிர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையைச் சேர்ந்த நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ராஜசேகரன், ஸ்டூடியோகிரின் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் இந்தக் காமன் டிபியை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close