Published : 16,Jul 2021 09:51 PM
கோவை: ஸ்டேப்ளர் பின்களை கொண்டு கர்ணன் படக்காட்சி ஓவியம்
ஓவியம் வரையும் கலைஞர்களுக்கு தூரிகையும், வண்ணங்களும்தான் ஆயுதம். ஆனால், வித்தியாசமாக ஸ்டேப்ளர் பின்களால் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த இளம் ஓவியர் ஒருவர்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த ஓவியரான சீவக வழுதி, மேற்கத்திய ஓவியர்கள் சிலரின் பாணியில் ஸ்டேப்ளர் பின்களைக் கொண்டு உருவங்களை வரைந்துவருகிறார். பல லட்சம் ஸ்டேபிளர் பின்களைக்கொண்டு கர்ணன் படக்காட்சியை தற்போது இவர் உருவாக்கியுள்ளார். ஓவியம் வரைய ஸ்டேப்ளர் பின்களைப் பயன்படுத்தி, யாரும் செய்யாத இந்த முயற்சிக்கு international book of record பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஏற்கனவே இவர் ஆணியில் நூல்களைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளார். இதுபோன்ற வித்தியாசமான முயற்சியால் ஓவியக்கலையின் பரிமாணம் வெவ்வேறு தளங்களில் மிளிரும் என்கிறார் இந்த ஓவியர்.