[X] Close

யூரோ கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இத்தாலி பலப்பரீட்சை

விளையாட்டு

Who-will-win-the-Euro-Cup-England-Italy-in-the-final

கால்பந்தாட்ட ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யூரோ கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


Advertisement

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்தின் வெம்பேலே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. கடந்த 55 ஆண்டுகளில் சர்வதேச கோப்பைக்கான தொடர் ஒன்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உற்சாகத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. சர்வதேச தொடரில் இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இது 10 ஆவது முறையாகும்.

image


Advertisement

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் கேன், ஸ்டெர்லிங் ஆகியோர் முக்கிய துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகின்றனர். சொந்த மைதானத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்கள் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மற்றொரு நட்சத்திர வீரர் ஃபோடன் காயம் காரணமாக களமிறங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

image

இத்தாலி அணியைப் பொறுத்தவரையில் ஜியோவானி டி லொரென்சோ, பொனுசீ, பல்மீரி, ஃபெட்ரிக்கோ சீசா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். உலகக்கோப்பைக்கு நிகரான சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ள யூரோ கோப்பையை உச்சி நுகரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றுள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close