Published : 04,Aug 2017 04:11 AM

மருத்துவ பரிசோதனை: ஒரு நாள் லீவு போட்ட ரோகித்!

Rohit-s-flying-visit

மருத்துவ பரிசோதனைக்காக இலங்கையில் இருந்து நேற்று மும்பை திரும்பினார் ரோகித் சர்மா.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் நடந்து வருகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில், காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா இடம் பிடித்திருந்தார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா, மருத்துவ சிகிச்சைக்காக நேற்று மும்பை திரும்பினார். 

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் கூறும்போது, ‘கடந்த வருடம் காயத்துக்கு ஆபரேஷன் செய்தார் ரோகித். அதற்கான மருத்துவ பரிசோதனை நடந்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக நேற்று இரவு மும்பை சென்றார் ரோகித். பரிசோதனை முடிந்து ஒரே நாளில் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை திரும்பி விடுவார்’ எனத் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்