Published : 02,Jul 2021 09:44 PM
ட்ரெண்டிங்கில் நடிகர் விஜயின் #FromTheSetsOfBEAST ஹேஷ்டேக்

நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில், #FromTheSetsOfBEAST என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பிறந்தநாள் பீஸ்ட் பட செட்டில் கொண்டப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் பங்கேற்றுள்ளனர்.
அந்த படங்களை இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.