நான்கைந்து குறும்படங்களை இணைத்து திரைப்படமாக உருவாக்கும் 'அந்தாலஜி' வகைப்படங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அமானுஷ்யம் என்ற கருவை மட்டும் வைத்துக்கொண்டு, ‘6 அத்தியாயம்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆறு குறும்படங்களை உள்ளடக்கிய இதை, ’தொட்டால் தொடரும்’ கேபிள் சங்கர், எழுத்தாளர் அஜயன் பாலா மற்றும் சங்கர் தியாகராஜன், லோகேஷ், சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் இலங்கையில் வெளியிடப்படுகிறது. செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு