[X] Close

ஜூலையில் துவங்கும் ’தனுஷ் 43’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

சினிமா

Actor-dhanush-s-D43-Final-Schedule-Shoot-Resume-From-July-2021

தனுஷ்- மாளவிகா மோகனன் நடிக்கும் ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது சத்யஜோதி நிறுவனம்.


Advertisement

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’தனுஷ் 43’  படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.  ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில், நடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ‘கர்ணன்’ வெளியானது, கடந்த வாரம் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. ஆனால், இப்படங்களின் புரொமொஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை. தற்போது, ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தனுஷ் தமிழகம் வரவிருக்கிறார்.

image


Advertisement

இதனை, உறுதி செய்துள்ளது ‘தனுஷ் 43’ படத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ். இன்று தனுஷ் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்து செல்வராகவனின் ‘நானே வருவேன்’ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close