[X] Close

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரான்ஸ்-போர்ச்சுகல் போட்டியை பார்த்த விண்வெளி வீரர்

விளையாட்டு

An-Astronaut-watched-France-Versus-Portugal-EURO-2020-League-Match-from-International-Space-Station

யூரோ 2020 தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான பிரான்ஸ் மற்றும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனான போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்தப் போட்டியை கோடான கோடி ரசிகர்கள் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து பார்த்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட். 


Advertisement

அந்த படத்தை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். இதனை ரசிகர்கள் சிலர் ரீ-ட்வீட் செய்து கமெண்டும் அடித்துள்ளனர். 

image


Advertisement

“ஆகாயத்திற்கு பறக்கும் பெனால்டி பந்துகளை தாமஸ் விண்வெளியில் கேட்ச் செய்வார்” என ஒரு ரசிகர் சொல்லி இருந்தார். இந்த போட்டி 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close