[X] Close

மே.வங்கம்: ’பாஜகவிலிருந்து திரிணாமுல் கட்சியில் இணைபவர்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு’

இந்தியா

TMC-Welcomed-new-members-who-were-previously-worked-with-BJP-by-spraying-Sanitiser-to-purify-them-in-West-Bengal

அரசியலில் கட்சி தாவல் என்பது சகஜமான ஒன்று. அடிமட்ட தொண்டர் தொடங்கி மேல்மட்ட தலைவர்கள் வரை அவ்வப்போது கட்சி மாறுவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் கிருமி நாசினி தெளித்து கட்சி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 


Advertisement

அங்குள்ள பிர்பூம் மாவட்டத்தின் இளம்பசார் வட்டாரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது, சுமார் 150 உறுப்பினர்கள் இப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  கிருமி நாசினி செலுத்தும் கருவி மூலம் அவர்கள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

வீடியோ லிங்க் : https://twitter.com/ANI/status/1408044781977018368?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts


Advertisement

Advertisement

Advertisement
[X] Close