[X] Close

குழந்தைகளைப் போல் பிஸ்கட்டை நீரில் ஊற வைத்து உண்ணும் காகம்: வைரல் வீடியோ

தமிழ்நாடு,வைரல் வீடியோ

Crow-soaking-biscuits-in-water-like-a-baby-viral-video

ராசிபுரத்தில் குழந்தைகளைப் போல் பிஸ்கட்டை நீரில் ஊறவைத்து காகம் ஒன்று உண்ணும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது வீட்டிற்கு தினம்தோறும் காகம் ஒன்று வந்து செல்கிறது. இதனையடுத்து ரவி குடும்பத்தினர் தினந்தோறும் வீட்டிற்கு வரும் காகத்திற்கு நீரும் பிஸ்கட்டும் வைத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த காகம் பிஸ்கட்டை எடுத்து குழந்தைகளைப் போல் நீரில் ஊறவைத்து உண்கிறது. இதனையடுத்து குடும்பத்தினர் தினந்தோறும் வரும் காகத்திற்காக நீரும் பிஸ்கட்டும் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது காகம் குழந்தைகள் போல் நீரில் பிஸ்கட்டை ஊறவைத்து உண்ணும் வீடியோ ராசிபுரம் பகுதி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close