Published : 28,Jan 2017 08:24 AM
மெரினா வன்முறை.. முதலமைச்சர் ஆலோசனை

மெரினா வன்முறை தொடர்பாக போலீஸ் எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர் மற்றும் டிஜிபியுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தின் கடைசி நாளான ஜனவரி 23-ம் தேதி சென்னை மெரினாவில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு , தீ வைப்பு என பல சம்பவங்கள் அரங்கேறின. இந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறி 200-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மெரினா வன்முறை தொடர்பாக போலீஸ் எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர் மற்றும் டிஜிபியுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.