[X] Close

தோனி இல்லாத ஐசிசி தொடரின் இறுதிப்போட்டி - ‘கூல் கேப்டனை’ மிஸ் செய்யும் இந்திய அணி

விளையாட்டு

First-Time-in-the-Fourteen-Years-History-Indian-Cricket-Team-playing-an-ICC-Major-Tournament-Without-MS-Dhoni-in-WTC-against-New-Zealand-Tomorrow-in-England-s-Southampton-Ageas-Bowl

பதினான்கு ஆண்டுகளில் தோனி இல்லாமல் முதல் ஐசிசி டோர்ணமென்ட் பைனலில் இந்தியா விளையாடுகிறது. 2007 - 50 ஓவர் உலக கோப்பை தொடங்கி 2019 - 50 ஓவர் உலக கோப்பை வரையில் தோனி அணியில் இருக்க இந்தியா ஐசிசி தொடரில் களம் கண்டது. இந்த முறை நிச்சயம் ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோனியை இந்திய கிரிக்கெட் அணி மிஸ் செய்யும். 


Advertisement

பவர் ஹிட்டிங் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கடந்த 2004 வாக்கில் கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் தோனி. தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாக செய்தார். அதன் மூலம் 2007 - 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இடம் பிடித்தார். அதே ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை தனது தலைமையின் கீழ் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். தொடர்ந்து ஒருநாள் அணிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2008இல் டெஸ்ட் கேப்டனாகவும் அணியை வழிநடத்த தொடங்கினார். 

image


Advertisement

கேப்டனாக பொறுப்பேற்ற ஆறு ஆண்டு காலத்தில் டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் ஷார்டர் பார்மெட் டோர்ணமென்ட்களின் கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் தோனி. 

இது தவிர்த்து ஐசிசி நடத்தும் டோர்ணமென்ட்களில் இந்தியாவை அரையிறுதி, ரன்னர் அப் வரையிலும் கூட அழைத்து சென்றுள்ளார் தோனி. கேப்டன் பதவியை கோலியிடம் ஒப்படைத்த பிறகும் அணியில் ஒரு வீரராக 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 - 50 ஓவர் உலக கோப்பை தொடரில் தோனி விளையாடி இருந்தார். 

image


Advertisement

கடந்த 2020இல் அவர் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்திய அணி தோனி இல்லாமல் முதல்முறையக 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் விளையாட உள்ளது. அவர் அணியுடன் விளையாடவில்லை என்றாலும் தனது ஜூனியர்களுக்கு அந்த ஜாம்பவான் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்குள் இருக்கும். அதை பின்பற்றி இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்புவோம்.


Advertisement

Advertisement
[X] Close