ஒடிசாவில் கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக தரையில் படுத்திருந்ததாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மாவட்ட தலைமையக நகரமான பாரிபாடா அருகே பாங்கிசோலில் அமைக்கப்பட்ட பிரத்யேக கொரோனா மருத்துவமனையில் ஒரு நோயாளியின் உதவியாளரால் எடுக்கப்பட்டது.
மயூர்பஞ்ச் நிர்வாகம் கடந்த ஆண்டு கலிங்க மருத்துவ அறிவியல் கழகத்துடன் (கிம்ஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கொரோனாவின் முதல் அலை ஓய்ந்த பிறகு மூடப்பட்ட பிரத்யேக மருத்துவமனை அடுத்த அலை தொடங்கியதும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில்தான் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிர்வாணமாக தரையில் படுத்து உறங்கும் வீடியோ மற்றும் புகைக்கப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து வீடியோவை எடுத்த அஜித் சாஹா என்ற நபர் கூறுகையில் “நான் மே 19 அன்று எனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன், அவரை கவனிப்பதற்காக நான் அங்கேயே தங்கியிருந்தேன். கழிவறையில் கிடந்த மக்கள் உயிரிழப்பதை நான் கண்டேன். இங்கு வரும் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. கழிவறைக்கு செல்ல முடியவில்லை.
சரியான கவனிப்பு இல்லாமல் அவர்கள் உயிர்களை இழந்து கொண்டிருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அவ்வப்போது மட்டுமே வார்டுக்கு வருகிறார்கள். மே 19 முதல் 29 வரை மட்டுமே நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்தனர். மருத்துவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை நோயாளிகளைப் பார்க்க வருகிறார்கள். ஆனால் அனைவருக்கும் கவனிப்பு அளிக்க போதுமான ஊழியர்கள் இல்லை” என்றார்.
இதுகுறித்து மயூர்பஞ்ச் கலெக்டர் வினீத் பரத்வாஜ் மருத்துவமனையில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஒரு நோயாளியை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புறக்கணித்ததாக அண்மையில் சமூக ஊடகங்களில் கூறப்பட்ட குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார். இருந்தாலும், வீடியோ மற்றும் புகைப்படங்களில் மருத்துவமனையில் ஒரு பெண் உட்பட பல நோயாளிகள் நிர்வாணமாக கிடந்தனர்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?