பாகிஸ்தானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நவாஸ் ஷெரீஃப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற உள்ளது.
பனாமா ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகளில் ஆளும் முஸ்லீம் லீக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நவாஸ் ஷெரீஃப் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டாவது நாளாக நவாஸ் ஷெரீஃப் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவரான கவாஜா சயீத் ரஃபீக் தெரிவித்தார். நேற்றைய கூட்டத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தனது சகோதரரான ஷேபாஸ் ஷரீஃபின் பெயரை நவாஸ் முன்மொழிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்துவரும் ஷேபாஸ், உடனடியாக பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்க முடியாது. அந்நாட்டு சட்டப்படி, நாடளுமன்ற உறுப்பினர் ஒருவரே பிரதமராக பதவியேற்க முடியும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினராக ஷேபாஸ் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide