[X] Close

வாரணாசியில் கொரோனாவால் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

இந்தியா,கொரோனா வைரஸ்

PM-Modi-pays-tribute-to-those-died-in-second-wave-of-Covid-19-in-Varanasi

மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் பலருடன் கொரோனா நிலவரம் குறித்து இன்று உறையாற்றியிருந்தார் பிரதமர் மோடி. அப்போது வாரணாசியில்  பணியாற்றும் அனைவருக்கும், அவர்களின் ஒருங்கிணைந்த சேவைக்காக பாராட்டு தெரிவித்தார் அவர்.


Advertisement

வாரணாசியின் கொரோனா கள நிலவரத்தை அதிகாரிகள் வழியாக அவ்வப்போது தெரிந்துக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த இரண்டாவது அலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். “இந்த கொரோனா வைரஸ், நம்முடைய நேசத்துரியவர்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது” என்று பேசினார்.

முன்னதாக, வாரணாசியில் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மோடி அதை பொருட்டாகவும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது கவனிக்கத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா உட்பட, பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து இருந்தனர்.


Advertisement

image

வாரணாசி உட்பட உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களில், கடந்த மாதங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா. கொரோனாவால் இறந்தவர்கள் சடலங்கள் பல, கங்கை நதியில் ஆற்றில் வீசப்பட்ட அவலமும் நடந்தேறியது. வீசப்பட்ட சடலங்கள் எத்தனை என்ற தரவுகளோ, அவை ஏன் வீசப்பட்டன என்பதை அறிய மத்திய அரசு சார்பில் விசாரணையோ மேற்கொள்ளப்படாத நிலையே இருந்தது. இதற்கு கடுமையாக கண்டனங்கள் எழுந்த நிலையில்தான், தற்போது மோடி அம்மாநில முன்கள பணியாளர்கள் உடன் பேசி வருகின்றார். இருப்பினும் இப்போது கொஞ்சம் சூழல் சரியாகி, கடந்த சில தினங்களாக பாதிப்பு கட்டுக்குள் வருவதாக அம்மாநில அரசு கூறிவருகின்றது.

நேற்றைய தினம் வெளிவந்த உத்தர பிரதேச மாநில தரவுகளின்படி, ஏப்ரல் 30 ம் தேதி கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வந்தவர்களின் எண்ணிக்கையோடு தற்போதைய சிகிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை 62 சதவிகிம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையாக, இதுவரை உத்தர பிரதேசத்தில் 16,51,532 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 18,590 பேர் கொரோனாவால் இறந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close