Published : 28,Jul 2017 08:52 AM
மீண்டும் 350 கி.மீ.வேகத்தில் புல்லட் ரயில்

சீனாவில் புல்லட் ரயில்களின் வேகத்தை மீண்டும் மணிக்கு 350 கிலோ மீட்டராக அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவில் கடந்த 2011ம் ஆண்டு கிழக்கு ஜேஜியாங் பகுதியில் நடைபெற்ற ஒரு ரயில் விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், 350 கி.மீ வரை செல்லும் புல்லட் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. இதையடுத்து ரயிலின் வேகத்தை மணிக்கு 250 முதல் 300 கிலோ மீட்டராக சீனா அரசு குறைத்தது. இந்நிலையில், 6 வருடத்திற்கு பின் புல்லட் ரயில்களின் வேகத்தை மறுபடியும் செப்டம்பர் முதல் மணிக்கு 350 கி.மீ.யாக அதிகரிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.