[X] Close

ராஜினாமா ஏன்?: நிதிஷ் விளக்கம்

Why-Resign----Nitish-s-explanation

பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பீகார் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “கடந்த 20 மாதங்களாக இந்தக் கூட்டணி அரசை நடத்தி வருகிறேன். துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்காக நான் அவரைப் பதவி விலகச் சொல்லவில்லை. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டேன். எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ராகுல் காந்தியிடமும், லாலு பிரசாத் யாதவிடமும் பேசினேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இப்போது வேறு வழியே இல்லாத சூழலில் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

ஊழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close