குஜராத் மாநிலம் பருச் நகரில் உள்ள படேல் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரசிங் சூடாசாமா தெரிவித்தார். மேலும் "படேல் வெல்ஃபேர் அறக்கட்டளை கோவிட் 19 மருத்துவமனையிலுள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 12 பேர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுமார் 50 நோயாளிகள், மற்றும் உள்ளூர் மக்கள் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்கள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்” எனத் தெரிவித்தார்
சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த இதேபோன்ற மற்றொரு தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!