Published : 25,Jul 2017 02:08 PM

ஐந்தாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர்

WTA-Tennis-Series-in-India-five-years-later

ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது. மும்பை ஓபன் போட்டியை வரும் நவம்பர் மாதம் நடத்த மகாராஷ்ட்ரா டென்னிஸ் சங்கம் முன்வந்துள்ளது. 

இதனால் சர்வதேச தரநிலையில் முதல் ஐம்பது இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகளுடன் விளையாடும் வாய்ப்பு, இந்திய வீராங்கனைகளுக்கு கிட்டியுள்ளது. இந்த தொடரில் பட்டம் வென்றால் பரிசுத் தொகையாக 12,500 (தோராயமாக ரூ.80 லட்சம்) அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு புனே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. அதில், தற்போது தரநிலையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை‌ எலீனா சுவிட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கிமிகோ டேட் க்ரம்மை வீழ்த்தி அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்