வரும் 9-ஆம் தேதியன்று ஐபிஎல் 2021 சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஜோஸ் ஹேசல்வுட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு மாற்றான வீரரை அடையாளம் காண சென்னை அணி தற்போது தடுமாறி வருவதாக தெரிகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவில் வீசி வரும் இரண்டாவது கொரோனா அலை தான்.
சென்னை அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை சார்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சிலரை தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும் மும்பை நகரில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் அந்த வீரர்கள் இந்த சீசனில் விளையாட தயாராக இல்லை என சொல்லி உள்ளார்கள்.
“அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தீவிரமும், சில வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி அணிகளுடன் போட்டுள்ள ஒப்பந்தமும் தான் மாற்று வீரரை அணியில் சேர்க்க சிக்கலாக உள்ளது. விரைவில் மாற்று வீரரை அடையாளம் காண வேண்டியுள்ளது” என சென்னை அணியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் நோக்கில் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து ஹேசல்வுட் விலகுவதாக சொல்லி இருந்தார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்