[X] Close >

நாமக்கல்: சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

Namakkal-Two-people-were-tragically-killed-in-a-wall-collapse

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


Advertisement

பொத்தனூர் மதுரைவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர், அப்பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆறுமுகம் என்பவர் மூலம் வீட்டை சீரமைத்துள்ளார். அப்போது கட்டட தொழிலாளர்கள் அஞ்சலையம்மாள், மாதேஸ்வரன், பழனியப்பன், குணசேகரன், கோவிந்தம்மாள் மற்றும் பாரதி ஆகியோர் கட்டடசுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

image


Advertisement

இந்த நிலையில் திடீரென கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் கட்டட தொழிலாளி மாதேஸ்வரன் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பழனியப்பன், குணசேகரன், கோவிந்தம்மாள் ஆகிய மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

image

இதில், அதிர்ஷ்டவசமாக அங்கு வேலைபார்த்த பாரதி உயிர் தப்பினார். கட்டடம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்ததும் ,மூவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருவதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close