தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பல்வேறு கட்சிகளின் தொண்டர்களுக்காக, ஆம்பூர் - வாணியம்பாடி பகுதிகளில் விடிய விடிய தயாரிக்கப்படுகிறது. தினமும் 5,000 முதல் 10,000 பேருக்காக 1,000 கிலோ முதல் 2,000 கிலோ வரையிலான பிரியாணி தயார் செய்யும் பணிகளில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி என்றாலே இஸ்லாமியர்களால் தயாரிக்கப்படும் அசைவ உணவான பிரியாணிதான் நினைவுக்கு வரும். இங்கு தயாராகும் பிரியாணி புகழ்பெற்றது.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வாக்கு சேகரிக்கும் பொருட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை ஆகியோரை உற்சாகப்படுத்தும் விதத்தில், அவர்கள் சாப்பிட பிரியாணியை வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி ஆகியவற்றுக்கான ஆர்டரின் பேரில் சமையல் கலைஞர்கள் விடிய விடிய இரவு முழுக்க பிரியாணியை தயாரிக்கின்றனர். அவ்வாறு தயாரிக்கப்படும் பிரியாணி, ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கு சிறு சிறு பொட்டலங்களாக கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆர்டர் செய்து பெறும் பொட்டங்களை தங்கள் தொண்டர்களுக்கு கட்சிப் பிரமுகர்கள் அளித்து வருகின்றனர்.
தேர்தல் பரப்புரை மட்டுமின்றி, தலைவர்கள் வருகை என்றால் பிரியாணியின் தேவை அதிகமாகி, அதற்கான ஆர்டர்கள் வழங்குகின்றனர் கட்சிப் பிரமுகர்கள். இதன் காரணமாக, தினமும் 1000 கிலோ முதல் 2,000 கிலோ வரையிலான பிரியாணி தயாரிக்கப்பட்டு, 5,000 முதல் 10,000 வரையிலானோருக்கு பிரியாணி தயார் செய்யும் பணிகளில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரியாணியை தயாரிக்கும் சமையல் கலைஞர் ஷேர்கான் துபைல் அகமதுவிடம் பேசும்போது, "கொரோனா பேரிடர் காலத்தில், அதாவது கடந்த ஒரு வருடமாக பிரியாணி தயாரிக்கும் ஆடர்கள் இல்லாமல், உண்ண உணவு இன்றி தவித்தோம். தற்போது தேர்தல் நடப்பதால் கட்சித் தலைவர்கள் வருகை அதிகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வாக்குகளை சேகரிக்க, அவர்களுக்கு பிரியாணி வழங்குகின்றனர். இதற்காக ஆர்டர்கள் நிறைய கொடுக்கப்பட்டு பிரியாணி தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் உற்சாகமாக.
- ஆர்.இம்மானுவேல்
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்