கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர்களுக்கு, தமிழகத்தின் தேர்தல் களத்தால் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக மக்களை பெரும் துயரத்திற்கும் இன்னலுக்கும் ஆளாக்கியுள்ளது, ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய சரிவுகளை கண்டுள்ளது, அதிலும், நாட்டுப்புறக் கலைஞர்களின் நிலை, மிகவும் கவலை அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அரசு அவர்களுக்கான நிவாரண உதவி செய்தாலும், வருவாய் பற்றாக்குறை காரணமாக வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அவர்கள் தவித்து வந்தனர்.
இந்தச் சூழலில்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், அவர்களுக்கு உறுதுணைக் கரம் நீட்டியிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாதிரியாக தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதில் நாட்டுப்புறக் கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேபோல், வேட்புமனு தாக்கல் நிகழ்விலும் இவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் வேட்புமனுத் தாக்கலை நிறைவு செய்திருக்கிறது. நாளை ஒருநாள் மட்டுமே வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் எஞ்சியுள்ளது.
பெரும்பாலான வேட்பாளர்களும் தங்களது வேட்புமனு தாக்கல் 'வைபவம்' சிறப்பாக அரங்கேற, இந்த நாட்டுப்புற கலைஞர்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. இது, தேர்தல் பரப்புரை முடியும் வரை தொடரும் என்பது உறுதி. இதனால், இந்தக் கலைஞர்களுக்கு வருவாயும் கிடைக்கப் பெறுகிறது.
ஓராண்டு காலமாக முடங்கிப்போன இவர்களது வாழ்வாதாரம், இந்தத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தங்களை அழைத்து வேலை தருவதால் வெகுவாக மீண்டுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
- ரா.சுபாஷ் பிரபு
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி