[X] Close >

கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ

No-chance-to-go-to-3rd-team-of-makkal-neethi-maiyam-says-mdmk-general-secretary-Vaiko

கமல்ஹாசன் தலைமையிலான 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


Advertisement

திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதியும் திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

Salary for housewives! MNM chief Kamal Haasan says time has come- The New  Indian Express


Advertisement

ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்தியன் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளோடு உடன்பாடு எட்டவில்லை. மதிமுகவோடு திமுக 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை என்பதால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தொகுதி பங்கீடு விவகாரத்தில் விசிகவை திமுக கவுரவமாக நடத்தியுள்ளது. 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னும் திமுக அழைக்கவில்லை. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close