[X] Close >

’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!

England-Captain-Joe-Root-Picks-Five-wickets-against-India-in-Ahmedabad-test-and-India-lose-all-wickets-for-145-Runs

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அவுட்டானாது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. இந்த நிலையில் 53.2 ஓவர்களுக்கெல்லாம் இந்தியா ஆல் அவுட்டாகி உள்ளது. 


Advertisement

இந்தியாவுக்காக ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 66 ரன்களை குவித்திருந்தார். கோலியின் ஆட்டம் ஆறுதலாக அமைந்தது. மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் கிரீஸுக்கு வருவதும், பெவிலியனுக்கு திரும்புவதுமாக பிசியாக இருந்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். பார்ட் டைம் ஸ்பின்னரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் எடுத்துள்ளார். 6.2 ஓவர்களில் வெறும் 8 ரன்களை மட்டுமே ரூட் கொடுத்திருந்தார். அதே போல மற்றொரு ஸ்பின்னரான லீச் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 


Advertisement

இந்திய அணி இந்த ஆட்டத்தில் இப்போதைக்கு 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அகமதாபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதே முதல் இரண்டு நாட்களுக்குள் 20 விக்கெட்டுகள் விழ காரணம் என தெரிவித்துள்ளனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close