[X] Close >

"அணியில் சேர்க்காததால் விரக்தியில் தனியாக கடற்கரைக்கு சென்றேன்" சூர்யகுமார் யாதவ் உருக்கம்

I-actually-went-alone-to-beach-for-a-walk-says-Suryakumar-on-Australia-tour-snub

ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யாததையடுத்து கடற்கரைக்கு தனியே நடந்து சென்றதாக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கடந்த 2020 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 இன்னிங்சில் 480 ரன்களை சூர்யகுமார் யாதவ் குவித்திருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அப்போது சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

"இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றிருந்தபோதே நான் தேர்வு செய்யப்படுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தி தான்" என ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகதபோது சூர்யகுமார் யாதவ் சொல்லியிருந்தார்.


Advertisement

image

ஆனால் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து "ஸ்போர்ட்ஸ் டுடேவு"க்கு பேட்டியளித்த அவர் "நான் தேர்வாகாதபோது தனியே கடற்கரைக்கு நடந்தே சென்றேன். என் மனைவியிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பிவிடுவேன் என்றேன். அப்போது ஐபிஎல்லில் இன்னும் சில போட்டிகள் மீதமிருந்தது. எப்படி விளையாடுவது, அணியை எப்படி வெற்றிப்பெற வைப்பது என யோசிப்பதற்காக சென்றேன். அப்போது என் மனைவியிடம் கொஞ்சம் நேரம் கொடுத்தால் திரும்ப வரும்போது என் முகத்தில் பெரிய புன்னகையை பார்க்கலாம் என கூறினேன்" என்றார்.

image


Advertisement

மேலும் "கடற்கரைக்கு சென்றுவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி அறைக்கு சென்றபோது அனைவரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். உனக்கான நேரம் வரும் அதுவரை நீ தொடர்ந்து பயிற்சி செய் என வலியுறுத்தினார்கள். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. நான் ஏற்கெனவே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்திய அணியினருடன் எப்படி நேரத்தை செலவிடப்போகிறேன் என்று நினைத்து பார்க்க தொடங்கிவிட்டேன். கேப்டன் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடமிருந்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வேன்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close