காங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கமுடியவில்லை என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது ஆற்றிய உரையில் முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆளுங்கட்சி சட்டப்பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தது. இதைத்தொடர்ந்து பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “சட்டப்பேரவையில் பேசிய முதலைமைச்சர் நாராயணசாமி வாக்குறுதிகள் குறித்து பேசாமல் ஆளும் மத்திய அரசை குறை கூறி பேசியிருக்கிறார். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது? அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. அரசு சரியாக செயல்படாததால் அவர்களின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
பெரும்பான்மை குறைந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அது எங்களுடைய கடமை. என்னுடைய ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பாலங்களை இப்போது திறந்துள்ளனர். ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து பேசியே காலம் ஓடிவிட்டது. காங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கமுடியவில்லை.” எனத் தெரிவித்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?