மத்திய சுகாதார அமைச்சகம் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகமாகியுள்ளதாக கண்டறிந்ததோடு, அந்த பகுதிகளை எச்சரிக்கையுடன் கையாண்ட நிலையில் கேரளாவில் நேற்று (ஞாயிறு) மட்டும் 4,070 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சுமார் 58,313 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாததுதான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். தொற்று பாதிப்பின் வாராந்திர சதவிகிதமும் கேரளாவில் அதிகரித்து வருவது கவலை தருவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி