உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன்.
78 வயதான அவர் 2009 முதல் 2017 வரையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவை ஆண்டபோது துணை அதிபராக பணியாற்றியுள்ளார். வழக்கமாக அமெரிக்க அதிபராக பதவி வகிப்பவர்கள் அமெரிக்க தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் குடி கொள்வார்கள். அந்த வகையில் அதிபர் ஜோ பைடனும் டெலிவரிலிருந்த பூர்வீக வீட்டிலிருந்து வெள்ளை மாளிகைக்கு குடியேறி இருந்தார்.
இந்நிலையில் அவர் வெள்ளை மாளிகையில் அதிபராக தங்கிய ஒரு மாத கால அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது தான் “தங்க முலாம் பூசிய கூண்டு” என வெள்ளை மாளிகையை விமர்சித்துள்ளார் அதிபர் பைடன்.
“இந்த ஒரு மாத காலத்தில் தினந்தோறும் காலையில் எழுந்ததும் ஜில்லுவிடம் (பைடனின் மனைவி) ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என சொல்வேன். நான் அப்படி சொல்வதற்கு காரணமும் உண்டு. எனக்காக வெள்ளை மாளிகையில் பணியாட்கள் காத்திருப்பது எனக்கு அசவுகரியத்தை கொடுக்கிறது. எனது வருகைக்காக யாரும் எதிர்ப்பார்த்து காத்திருக்க கூடாது என்ற வகையில் தான் நான் வளர்ந்தேன். ஆனால் இங்கு நிறைய சம்பிரதாய வழக்கங்கள் உள்ளன.
என்னை பொறுத்தவரை வெள்ளை மாளிகையில் வாழ்வதென்பது தங்க முலாம் பூசிய கூண்டுக்குள் வாழ்வது போலதான்.
நான் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தபோது பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நேவல் அப்சர்வேட்டரியில் தங்கியிருந்தேன். அப்போது நான் சுதந்திரமாகவே எனது குடியிருப்பு பகுதிக்குள் உலாவுவேன். ஆனால் இங்கு அதை ரொம்பவே மிஸ் செய்கிறேன். மிகுந்த கட்டுப்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன்.
ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் ஆபிஸுக்குள் நான் நிறைய முறை அலுவல் ரீதியாக வந்திருக்கிறேன். ஆனால் குடியிருப்புக்குள் சென்றது கிடையாது. இந்த குடியிருப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது” என தெரிவித்துள்ளார் பைடன்.
வெள்ளை மாளிகையில் 132 அறைகள் உள்ளன. 16 விருந்தினர் மாடங்களும், மூன்று சமையலறையும், 35 குளியலறையும் அமைந்துள்ளன. இரண்டு பேஸ்மெண்ட் உட்பட மொத்தமாக 6 தளங்களை கொண்டுள்ளது. 1800-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அதிபர்கள் தங்கும் குடியிருப்பாக உள்ளது வெள்ளை மாளிகை. 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது.
அதிபர் பைடனுடன் அவரது மனைவி ஜில் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ளார். அவர்களுடன் அவரது குடும்பத்தினரும் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ளனர்.
செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அதிபர் பைடன். மேஜர், சேம்ப் என இரண்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் தான் அதிபர் பைடனின் பேவரைட். இப்போது அந்த இரண்டு நாய்களும் அமெரிக்க அதிபரின் குடியிருப்பான வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளன.
இருந்தாலும் அதிபர் பைடன் துணை அதிபராக இருந்தபோது அப்போதைய அதிபர் ஒபாமாவின் குடியிருப்பு பகுதிக்குள் பலமுறை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார் வெள்ளை மாளிகையின் முன்னாள் புகைப்படக்காரர் Pete Souza.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி